55 வருடத்துக்குப் பிறகு பாகிஸ்தான் செல்கிறது இந்திய டென்னிஸ் அணி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்கிறது. 


Advertisement

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் வரும் செப்டம்பர் 14, 15ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய டென்னிஸ் அணி பங்கேற்குமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில் டென்னிஸ் அணி, பாகிஸ்தான் செல்ல இருப்பதை, இந்திய டென்னிஸ் சங்க பொதுச் செயலாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜி உறுதி செய்துள்ளார். 


Advertisement

’’டேவிஸ் கோப்பை டென்னிஸ் என்பது இந்தியா-பாகிஸ்தான் இடையிலான தொடர் அல்ல, டென்னிஸ் உலகக் கோப்பை என்பதால் பாகிஸ்தான் சென்று விளையாடும் முடிவை எடுத்துள்ளோம். இது தொடர்பாக அரசிடம் எதுவும் பேசவில்லை’’ என்றார் ஹிரோன்மோய் சட்டர்ஜி.

அவர் மேலும் கூறும்போது, ‘’ பாகிஸ்தான் ஹாக்கி அணி, சமீபத்தில் இந்தியா வந்து விளையாடியது. இப்போது நாங்கள் அங்கு சென்று விளையாடுகிறோம். ஆறு வீரர்கள் கொண்ட அணியும் உதவியாளர்கள், பயிற்சியாளர் மற்றும் நானும் செல்ல இருக்கிறோம். விரைவில் விசாவுக்கு விண்ணபிக்க இருக்கிறோம்’’ என்று அவர் தெரிவித்தார். இதற்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Advertisement

இதன்மூலம் இந்திய டென்னிஸ் அணி கடந்த 55 ஆண்டுகளில் முதன்முறையாக பாகிஸ்தான் செல்கிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement