அல்லு அர்ஜூன் படத்துக்காக ஆளே மாறிய ஜெயராம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அல்லு அர்ஜூனின் தெலுங்கு படத்துக்காக தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றியிருக் கிறார் நடிகர் ஜெயராம்.


Advertisement

மலையாள நடிகர் ஜெயராம், தெலுங்கில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கிறார். த்ரிவிக்ரம் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயராம் ஜோடியாக, தபு நடிக்கிறார். இந்தப் படத்துக்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி இருக்கிறார் ஜெயராம்!


Advertisement

‘’எனக்கு வந்த கேரக்டர்கள் எல்லாம், உடல் எடை அதிகரிப்பது போலவே வந்தன. மலையாளத்தில் நான் நடித்த ’பஞ்சவர்ண தாதா’ படத்தின் இயக்குனர் அதிகமாக வெயிட் போட வேண்டும் என்று சொன்னார். கடந்த வருடம் உருவான இந்த படத்துக் காக உடல் எடையை அதிகரித்தேன். அடுத்து நடித்த ’மார்கோனி மத்தாய்’ படத்தில் முன்னாள் ராணுவ அதிகாரியாக நடித் தேன். இதற்கு உடல் எடை அதிகமாக வேண்டும் என்று இயக்குனர் சொன்னார். அதனால் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தி விட்டேன். அடுத்த படத்தில் ஐஏஎஸ் அதிகாரி கேரக்டர். இதற்கு டி.என்.சேஷனை மனதில் நினைத்ததால் உடன் எடையை அதிகரித்தேன். இதனால் உடல் எடை கணிசமாக உயர்ந்துவிட்டது. 


இந்நிலையில் அல்லு அர்ஜூன் நடிக்கும் தெலுங்கு படத்துக்காக உடல் எடையை குறைக்கச் சொன்னார்கள். கடுமையாக உடற்பயிற்சி செய்து 2 மாதத்தில் 12 கிலோ குறைத்திருக்கிறேன். இது எனக்கு 2 வது தெலுங்கு படம். இதில் என் கேரக்டர் பற்றி சொல்ல மாட்டேன். எனக்கு ஜோடியாக தபு நடிக்கிறார்’’ என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement