’ராணுவ சேவை செய்வதன் மூலம் தனது அர்ப்பணிப்பை தோனி நிரூபித்துள்ளார்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் பாஜக எம்.பியுமான கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். காஷ்மீரில், இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, பணியில் இணைந்தார். வரும் 31 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை, விக்டர் படையுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட இருக்கிறார்.
தோனி, ராணுவத்தில் இணைந்துள்ளது குறித்து பேசிய ராணுவத் தளபதி பிபின் ராவத், “தோனி, அடிப்படை ராணுவப் பயிற்சிகளை செய்திருக்கிறார். தன் பணிகளை அவரால் சிறப்பாக செய்ய முடியும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தோனி, இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று கடுமையாக விமர்சித்து வந்த கவுதம் காம்பீர், இப்போது தோனியை திடீரென பாராட்டியுள்ளார்.
அவர் கூறும்போது, ‘’ராணுவத்தில் இணைவது என்கிற தோனியின் முடிவு சிறப்பானது. ’உண்மையில் சீருடையை அணிய விரும்பினால், ராணுவத்துடன் நேரத்தை செலவிட வேண்டும்’ என்று பலமுறை அவரிடம் தெரிவித்திருக்கிறேன். இப்போது ராணுவத்துக்கு சேவை செய்ய முடிவு செய்திருப்பதன் மூலம் தனது அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளார் தோனி. அவரது இந்த செயல், ஆயிரக்கணக்கான இளைஞர்கள், ராணுவத்தில் சேர தூண்டுகோலாக இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்