“டிவியை பார்த்துதான் கொலையை தெரிந்து கொண்டேன்” - திமுக பெண் பிரமுகர் பேட்டி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி ‌கொலைக்கும், தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என திமுக ஆதிதிராவிட நலக் குழுவின் மாநில துணைச்‌ செயலாளர் சீனி‌யம்மாள் தெ‌ரிவித்துள்ளார். 


Advertisement

மதுரையில் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், தன் மீது குற்றம்சாட்டி சிலர் திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கின்றனர் என்றும், காவல்துறையினர் உண்மையா‌ன குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய‌ வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

                  


Advertisement

சீனியம்மாள் அளித்த பேட்டியில், “கொலை சம்பவத்தை டிவியில் பார்த்துதான் நான் தெரிந்து கொண்டேன். காவல்துறையினர் என்னிடம் விசாரணை நடத்தினார்கள். டிவியில் பார்த்து தெரிந்து கொண்டதை அவர்களிடம் கூறினேன். எனக்கும் உமா மகேஸ்வரிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறினேன். ‌உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒரு வருடமாக மதுரையில் இருக்கிறேன். இந்தச் சம்பவத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 

     

உமா மகேஸ்வரியிடம் பணம் கொடுக்கல், வாங்கல் ஏதாவது இருந்ததா எனக் காவல்துறையினர் கேட்டனர். எது‌வும் இல்லை என்று காவல்துறையிடம் கூறினேன். உமா மகேஸ்வரி மிகவும் நல்லவர்; அவருக்கு எதிரிகள் இருக்கவே வாய்ப்பு இல்லை. அவ‌ருக்கு இந்த நிலைமை ஏற்பட்டது எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் வருத்தம். நியாயமான முறையில் விசாரணை நடைபெற வேண்டும். உண்மையான குற்றவா‌ளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். என்‌னை வைத்து திமுகவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்” என்று கூறினார்.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement