[X] Close >

வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி

Suicide-attempt-to-set-young-woman-on-fire-by-dowry

திருவாரூரில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக இளம் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 


Advertisement

திருவாரூர் அருகே மருதப்பட்டினம் பகுதியைச்சேர்ந்த அருணுக்கும், மைதிலிக்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அப்போது முதல் மைதிலியை வரதட்சணை கேட்டு கணவர் அருண், மாமனார் இளங்கோ, மாமியார் சுபா ஆகியோர் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 


Advertisement

இந்நிலையில் மைதிலி இன்று அதிகாலை, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மைதிலி, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close