மஹாராஷ்டிர மாநிலம் புனேவில், துணிக் கடையில் இரண்டு பெண்கள் நூதனமாக ஆடைகளைத் திருடும் காட்சி அக்கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
புனேவில் உள்ள துணிக்கடை ஒன்றில் கையில் குழந்தையுடன் இரண்டு பெண்கள் சென்றுள்ளனர். தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை தோளில் வைத்தபடி, ஒரு பெண் துணிகளை தேர்வு செய்வதுபோல் நடந்து கொண்டிருந்தார்.
மற்றொரு பெண் துணிகளை அங்கிருக்கும் மேசை மேல் எடுத்து வைத்து, ஆடையை தேர்வு செய்வதுபோல் பணிப்பெண்ணை திசை திருப்பும் நேரத்தில், குழந்தையுடன் இருந்த பெண் துணிகளை லாவகமாக திருடி குழந்தைக்கு அடியில் மறைத்து வைத்து கொள்கிறார். பின்னர் எதுவும் தெரியாததுபோல அங்கிருந்து வெளியேறினார். இந்தக் காட்சிகள் கடையில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Loading More post
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு
ரஃபேல் விவகாரத்தில் 'இடைத்தரகர்' - பிரெஞ்சு ஊடகத் தகவலை சுட்டிக்காட்டி காங்கிரஸ் சாடல்
அடுத்தடுத்து அதிரடிகள்... இப்போது தமிழக அரசின் நிர்வாக முடிவுகள் எடுக்கப்படுவது எப்படி?
அரக்கோணம் இரட்டைக் கொலை: 4 நாள்களுக்குப் பிறகு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு