கனமழை, வெள்ளம் காரணமாக பீகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்தது.
பீகாரில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு 17 பேர் மழை வெள்ளம், மண்சரிவு, சுவர் இடிந்த சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்தது, மின்னல் தாக்கியது உள்ளிட்ட காரணங்களால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அசாமில் வெள்ள பாதிப்பினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. அசாமின் 33 மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் வெள்ளத்தில் கடுமையாக சிக்கித் தவிப்பதாக மாநில பேரிடர் மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் 38.82 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையிலும் நேற்று கனமழை பெய்தது. டெல்லியில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பதிவானது.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!