JUST IN

Advertisement

“ சந்திரயான்-2 ஆகஸ்ட் 20-க்குள் நிலவின் வட்டப்பாதையை சென்றடையும்”-இஸ்ரோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் நிலவின் சுற்று வட்டப்பாதையை சந்திரயான் 2 சென்றடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.


Advertisement

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த 22-ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. இதனையடுத்து சரியாக 16 நிமிடத்தில் சந்திரயான்-2 விண்கலம், பூமியின் வட்டப் பாதையை சென்றடைந்தது. இதனையடுத்து இஸ்ரோவிற்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன.

 

இந்நிலையில் சந்திரயான் 2 விண்கலம் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் நிலவின் சுற்று வட்டப்பாதையை சென்றடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது பூமியின் சுற்று வட்டப்பாதையை சுற்றி வரும் சந்திரயான் 2 விண்கலம் மெல்ல மெல்ல கடந்து ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் நிலவின் சுற்று வட்டப்பாதையை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement