பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல் : பட்டா கத்தியுடன் அட்டூழியம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை அரும்பாக்கம் சிக்னல் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் கத்தியால் வெட்டப்பட்டார்.


Advertisement

சென்னை அரும்பாக்கம் சிக்னல் அருகே சென்றுகொண்டிருந்த மாநகராட்சி பேருந்தில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கையில் பட்டா கத்தியுடன் இருந்த ஒரு மாணவர் மற்றொரு மாணவரான வசந்த் என்பவரை ரோட்டில் விரட்டி வெட்டினார். 

இதில் அந்த மாணவர் காயமடைந்தார். அதைத்தொடர்ந்து வெட்டிய மாணவர் உட்பட இரண்டு மாணவர்கள் பேருந்திற்குள் இருந்த மற்ற மாணவர்களையும் வெட்டினர். இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் பதட்டமடைந்தனர். வெட்டுப்பட்ட மாணவர் வசந்த் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். ரூட் பிரச்னையால் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement