பீகார், அசாம் வெள்ளம்: இதுவரை 166 பேர் பலி

166-people-died-in-Bihar-and-assam-rainfall

பீகார் மற்றும் அசாம் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.


Advertisement

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், பீகாரிலும் கடந்த வாரம் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அசாம் மாநிலத்தில் 64 பேரும், பீகாரில் 102 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். கஜிரங்கா தேசிய பூங்காவில் மட்டும் 141 விலங்குகள் உயிரிழந்துள்ளன. 


Advertisement

பீகாரில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 72 லட்சம் பேரும், அசாமில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 38 லட்சம் பேரும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழையைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தர்பங்காவில் உள்ள ஒரு கிராமத்தின் உள்ளூர்வாசிகள் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அப்பகுதியினர் கூறுகையில், “ஒரு வாரத்திற்கும் மேலாக அவதிபட்டு வருகிறோம். எங்கள் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. நாங்கள் ரயில் பாதையின் அருகே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதுவரை அரசு தரப்பில் இருந்து எவ்வித உதவியும் எங்களுக்கு வந்து சேரவில்லை” எனக் குற்றம் சாட்டுகின்றனர். அதேநேரத்தில், வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளம் வடிந்துள்ள நிலையில், மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement