கேப்டன் பதவிக்கு மனரீதியாக தயாராகி விட்டேன்: ரஷித் கான்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

’கேப்டன் பதவிக்கு மனரீதியாக தயாராகிவிட்டேன்’ என்று ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் தெரிவித்தார்.


Advertisement

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக, சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 தொடருக்கு மட்டும் கேப்டனாக இருந்த அவர், இப்போது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கும் கேப்டனாக நியமிக்கப் பட்டுள்ளார். 

இதுபற்றி அவர் கூறும்போது, ’’கேப்டன் பதவிக்கு என் பெயரை அறிவித்ததும் வியப்பு அடையவில்லை. ஏற்கனவே துணை கேப்டனாக இருக்கிறேன். அடுத்து கேப்டன் தானே? இந்தப் பதவிக்கு இப்போது மன ரீதியாக தயாராகிவிட்டேன். நாட்டுக்காக இதுபோன்ற பதவிகள் வரும்போது, எப்போதும் தயாராக இருக்க வேண்டும். என்னால் முடிந்த சிறந்த பங்களிப்பை செய்வேன். உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாகவே செயல்பட்டோம்.


Advertisement

மனரீதியாக இன்னும் பலமாகவும் சிறந்த பயிற்சியுடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்திருக்கிறோம். எங்களிடம் திறமை இருக்கிறது. அதை இன்னும் மேம்படுத்த வேண்டும். தேசிய அணிக்கு விளையாடும்போது வீரர்கள் பிட்னஸ் விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அணியில் இருக்கும் இளம் வீரர்கள் முதலில் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதோடு கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டால், எதையும் சாதிக்க முடியும்’’ என்றார். 
 

loading...

Advertisement

Advertisement

Advertisement