பத்திரப்பதிவு தடையில் தளர்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்டிருக்கும் தடையை மறு உத்தரவு வரும் வரை தளர்த்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் யானை ராஜேந்திரன், உயர் நீதிமன்ற தடை காலத்தில் 9,760 பத்திரப்பதிவு நடந்துள்ளதாகவும், இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய கோரி மனுத்தாக்கல் செய்ய அனுமதி கோரினார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், பிரதான வழக்கை முடித்த பின் இந்த மனுவை விசாரிக்கலாம் என்று தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியம், தடையை மீறி பத்திரப்பதிவு செய்த சார்பு பதிவாளர், உதவியாளர்களிடம் அரசு விசாரித்து வருவதாக தெரிவித்தார். மேலும், மாணவர்களை பள்ளி, கல்லூரிகளில் சேர்ப்பதற்கான செலவுக்காக சொத்துகளை விற்பனை செய்ய விரும்பும் பலர் நெருக்கடிக்கு ஆளாவதால், பத்திரப்பதிவுக்கான தடையைத் தளர்த்த வேண்டும் எனவும் துணை மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.


Advertisement

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, பத்திரப்பதிவுக்கான தடையை தளர்த்தி உத்தரவிட்டனர். இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ஏற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement