புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் வெற்றி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புரோ கபடி லீக் தொடரில், தனது முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.


Advertisement

7வது புரோ லீக் கபடி தொடர் ஐதரபாத் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.. முதல் 10 நிமிடங்களில், இரு அணிகளும் மாறிமாறி புள்ளி களை எடுத்தன. எனினும், சபீப் பாபுவின் சூப்பர் டேக்கிள் மற்றும் ராகுல் சவுத்ரியின் சூப்பர் ரைட் காரணமாக, தமிழ் தலை வாஸ் 16 புள்ளிகள் எடுத்து முன்னிலை பெற்றது. 


இதன் பின்னர் தொடர்ந்து அதிரடி காட்டிய தமிழ் தலைவாஸ் வீரர்கள் புள்ளிகளை குவித்து, தெலுங்கு வீரர்களை நிலை குலையச் செய்தனர். இறுதியில் 39-க்கு 26 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றது. 


Advertisement

நட்சத்திர வீரர் ராகுல் சவுத்ரி 7 ரைட் புள்ளிகள் உள்பட 12 புள்ளிகள் குவித்தார். தடுப்பு ஆட்டக்காரர் மஞ்சித் சில்லர் 5 டேக்கிள் புள்ளிகள் உள்பட 6 புள்ளிகள் சேர்த்தார். முன்னதாக நடைபெற்ற மற்றொரு போட்டியில் குஜராத் ஃபார்ட்சூன் ஜெயிண்ட்ஸ் 42க்கு-24 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தியது.

loading...

Advertisement

Advertisement

Advertisement