அழுத குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற குடிகார தந்தை 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சத்தம் போட்டு அழுததால் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற குடிகார தந்தையை போலீசார் கைது செய்தனர்.


Advertisement

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபால்பூர் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள். நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வீட்டில் மூன்று பெண் குழந்தைகளும் தந்தையும் மட்டுமே இருந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு தந்தை குடித்துவிட்டு போதையில் இருந்துள்ளார். 


Advertisement

அப்போது மூன்றாவது குழந்தையான ஒன்றரை வயது மகள் சத்தமிட்டு அழுதுகொண்டே இருந்துள்ளார். குழந்தையை சமாதானப்படுத்த முடியாமல் கோபமடைந்த தந்தை, அக்குழந்தையை தரையில் தூக்கி அடித்துள்ளார். இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. உடனடியாக குழந்தையின் உடலை சாக்கடையில் கொண்டு சென்று ஒளித்துவைத்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை குழந்தையின் உடலைக் கண்ட துப்புரவு தொழிலாளர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

விசாரணையில் குடிகார தந்தையே குழந்தையை அடித்துக்கொன்றது தெரியவர, அவரை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தையின் கொலையை நேரில் பார்த்த 3 மற்றும் 5 வயதான மற்ற இரு குழந்தைகளும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement