ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி வழிபடும் அதிமுக தொண்டர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோயில் அமைத்து, அவரை அதிமுகவினர் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.


Advertisement

கோவை மாநகராட்சியின் நூறாவது வார்டுக்குட்பட்ட கணேசபுரம் பகுதியில்தான், மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவுக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. எட்டு டன் எடையுள்ள ஒரே கல்லில் கால பைரவர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களின் உருவங்களும், இந்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என மும்மதத்தினரும் வணங்கும் வகையில் நிலா, விநாயகர், சிலுவை குறியீடுகளும் செதுக்கப்பட்டுள்ளன. அக்கல்லின் ஒரு பக்கம் முழுவதுமே ஜெயலலிதாவின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. நூறாண்டுகளுக்கு மேலும் ஜெயலலிதாவின் பெயர் நிலைக்கும் வகையில் கோயிலில் அவருக்கு சிலை வைத்துள்ளதாக கணேசபுரம் பகுதி அதிமுகவினர்கள் கூறுகின்றனர்.


Advertisement

ஜெயலலிதாவின் உருவம் செதுக்கப்பட்ட அப்பக்கத்தில் வேல், மணி மற்றும் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையும் பொறிக்கப்பட்டு உள்ளது. இதனுடன் 'ஜெயலலிதா அவர்களால் உருவாக்கப்பட்டது' என்ற வாசகமும், அவர் வாழ்வின் காலமும் இடம்பெற்றுள்ளது. தங்கள் தலைமுறை இருக்கும் வரை ஜெயலலிதாவே தங்களின் தெய்வம் என அப்பகுதி அதிமுகவினர் மன நெகிழ்வுடன் கூறுகின்றனர்.

இக்கோயிலில் நாள்தோறும் இருகால பூஜைகளோடு, பொங்கல் வைத்து, மலர்த்தூவி வழிபாடு நடத்தப்படுகிறது. பொதுமக்களும் இக்கோயிலுக்கு வந்து ஜெயலலிதாவின் சிலையை வணங்கி செல்கின்றனர். ஏழைகளின் கண்ணீர் துடைக்க எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்திய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறியதோர் நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அவருக்கு இக்கோயிலை எழுப்பியதாக கூறும் இப்பகுதி அதிமுகவினர், மறைந்த பின்பும் ஜெயலலிதாவே ஏழைகளின் இதய தெய்வம் எனக் கண்ணீர் பொங்க கூறுகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement