[X] Close >

’தோனி ரன் அவுட் துரதிர்ஷ்டம்’: பந்துவீச்சு பயிற்சியாளர்!

we-were-all-confident-till-Dhoni-was-there--Bharat-Arun

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், தோனி களத்தில் இருக்கும் வரை அதிக நம்பிக்கையுடன் இருந்தோம் என்று பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்தார்.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண். உலகக் கோப்பைத் தொடர் முடிந்து இந்தியா திரும்பி யுள்ள அவர், ’தி இந்து’ நாளிதழுக்குப் பேசியுள்ளார். 


Advertisement

அவர் அதில், ’’அரையிறுதிக்கு முன்புவரை இந்திய அணி வலுவானதாக இருந்தது. நியூசிலாந்து அணியுடனான அரையிறுதிப் போட்டி மறுநாளுக்குத் தள்ளிப் போனதால் சிக்கல் ஆனது. ஏனென்றால் மறுநாள் பிட்ச்-சின் தன்மை மாறிவிட்டது. தோனி யை விமர்சிப்பது பற்றி கேட்கிறீர்கள். அவரை விமர்சிப்பது நியாயமானதல்ல. அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு அதிகப் பங்களிப் பை செய்திருக்கிறார். அவர் ஜாம்பவான். பல சந்தர்ப்பங்களில் அவர், கேப்டன் விராத் கோலிக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். 

அரையிறுதிப் போட்டியில், தோனி களத்தில் இருந்த வரை, வெற்றி பெற்றுவிடுவோம் என்று நம்பினோம். இறுதி கட்டங்க ளில் அவர் பெரிய ஷாட்டை அடிக்க தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. ஆனால், துரதிர்ஷ்ட வசமாக, ரன் அவுட் நடந்துவிட்டது. 


Advertisement

கேப்டன் விராத் கோலிக்கும் துணை கேப்டன் ரோகித்துக்குமான ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கிறது. இருவரும் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  ஐபிஎல்- தொடரில் பிளே ஆப் முறையை பயன்படுத்துவது போல, உலகக் கோப்பைத் தொடரிலும் பிளே ஆப் முறைப் பயன்படுத்த வேண்டும்.’’ என்று தெரிவித்துள்ளார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close