காவல்துறையினரின் குறைகளை போக்க நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காவல் துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


Advertisement

சட்டப்பேரவையில் காவல்துறை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது காவல்துறையினரின் குறைகளை போக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக பதில் அளித்தார். மேலும் இதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். 14.75 கோடியில் 5 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம் படும் எனவும் திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 97.74 லட்சம் செலவில் சைபர் கிரைம் பிரிவு உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார். 


Advertisement

72 ஆயிரம் ஆளிநர்களுக்கு எரிபொருள் படி வழங்கப்படும். இதற்காக ரூ. 30 கோடி செலவினம் ஏற்படும். 14 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள், மெரினாவில் மீட்பு பணிகள் நிலையம் ரூ. 17. 25 கோடியில் அமைக்கப்படும். 54 மீட்டர் உயரம் கொண்ட வான்நோக்கி நகரும் ஏணியுடன் கூடிய ஊர்தி ரூ. 121 கோடியில் வாங்கப்படும். சென்னை வேப்பேரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும் எனவும் முதலமைச்சர் பேரவையில் தெரிவித்தார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement