[X] Close

தேர்தல் வெற்றி குறித்து பேரவையில் எடப்பாடி - ஸ்டாலின் காரசார விவாதம் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆட்சிக்கு வர மறைமுகமாக எப்படி திட்டம் போட்டீர்கள் என அனைவருக்கும் தெரியும் என திமுக.,வை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் விமர்சித்தார்.


Advertisement

மானிய கோரிக்கை விவாதத்தின் போது சட்டமன்ற இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் வெற்றி குறித்து பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

திமுக பொன்முடி : 37 தொகுதியில் மக்கள் எங்களுக்கு ஆதரவை தந்துள்ளனர்.


Advertisement

முதலமைச்சர் பழனிசாமி: நாங்கள் உண்மையைச் சொன்னோம்.  உண்மையை சொல்லி வாக்கு கேட்டோம். 9 இடங்களில் வெற்றி பெற்றோம். மேல இருக்கும் சக்கரம் கீழே வரும். கீழே இருப்பது மேலயும் போகும். அதேபோல் வரும் காலத்தில் வெற்றி பெறுவோம். 2021 ல் அதிமுக அரசு தான் மீண்டும் வரும்.

ஸ்டாலின்: விரைவில் திமுக ஆட்சிக்கு வரப்போகிறது. வந்ததும் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்தான் போகிறோம். திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என சக்கரம் கதை மூலமாகவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் முதல்வர்.


Advertisement

 பழனிசாமி : நீங்கள் கொடுத்த உண்மைக்கு மாறான வாக்குறுதிகளில் ஏமாந்து மக்கள் வாக்களித்துள்ளனர்.

ஸ்டாலின்: இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். 13 பெருசா 8 பெருசா? 

 பழனிசாமி : ஆர்.கே.நகரில் டெபாசிட் கூட வாங்க முடியாத நீங்கள் இப்போது எப்படி வெற்றி பெற்றீர்கள். மக்கள் ஏமாந்து வாக்களித்துள்ளனர். நிறைவேற்ற  முடியாத வாக்குறுதிகளை அள்ளித்தந்து வெற்றி பெற்றுள்ளது திமுக.

அமைச்சர் செல்லூர் ராஜு: வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என சொல்லமாட்டேன். நான் கலைஞரின் மகன் என அடிக்கடி சொல்லும் ஸ்டாலின், நகைக்கடனை தள்ளுபடி செய்வோம் என மக்களை ஏமாற்றி வாக்கை பெற்றீர்கள்.

செங்கோட்டையன் : அறவக்குறிச்சியில் தேர்தல் வாக்குறுதியாக ஆளுக்கு தலா 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக சொல்லியிருந்தார். வழங்கி விட்டாரா? 

ஸ்டாலின்: நாங்கள் சொன்னதை நிச்சயமாக நிறைவேற்றுவோம். நிச்சயம் ஆட்சிக்கு வந்து நிறைவேற்றுவோம்.

 பழனிசாமி: உண்மைக்கு மாறான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றீர்கள்! மறைமுகமாக ஆட்சிக்கு வரவும் திட்டமிட்டீர்கள் அதுவும் நடக்கவில்லை. ஆட்சிக்கு வர மறைமுகமாக எப்படி திட்டம் போட்டீர்கள் என அனைவருக்கும் தெரியும். திமுகவின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது.

loading...
Related Tags : edappadi pazhanisamychief ministerdebateassemblystalindmkadmk

Advertisement

Advertisement

Advertisement