JUST IN

‘இதுதான் என்னுடைய பாட்டில் மூடி சேலஞ்ச்’ - யுவராஜ் சிங்கிற்கு தவான் பதில்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் பாட்டில் மூடி சேலஞ்ச் செய்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் காயம் காரணமாக தொடக்கத்திலே வெளியேறினார் ஷிகர் தவான். அவர் இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாட்டில் மூடி சேலஞ்ச் செய்த வீடியோவை பதிவிட்டுள்ளார். பயிற்சி வலையில் பாட்டிலை வைத்து அதனை தன்னுடைய நேர்த்தியான பேட்டிங் திறமையால் மூடியை திறக்க வைத்தார்.

           

இந்த வீடியோ ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘யுவி பாஜி, இதுதான் என்னுடைய பாட்டில் மூடி சேலஞ்ச். காயத்திற்கு பிறகு முதன்முறையாக பேட்டிங் செய்கிறேன். காயத்தில் இருந்து மீண்டதில் மகிழ்ச்சி’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

                

முன்னதாக, பாட்டில் மூடி சேலஞ்ச் செய்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த யுவராஜ் சிங், அதனை லாரா, தவான், கெயில் மற்றும் சச்சின் ஆகியோருக்கு ஷேர் செய்து இருந்தார். அந்த வகையில், யுவராஜ் சிங்கிற்கு பதிலடியாக ஷிகர் தவான் தற்போது பாட்டில் மூடி சேலஞ்ச் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Advertisement: