பாட்டில் கேப் சேலஞ்ச்: களத்தில் குதித்த ஸ்வேதா மேனன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சமூக வலைத்தளங்களில், டிரெண்டாகி வரும், பாட்டில் மூடி சேலஞ்ச்-சில் பங்கேற்ற நடிகை ஸ்வேதா மேனனின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், பிட்நஸ் சேலஞ்ச் எனப் பல்வேறு சவால்கள் சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் தோன் றியது. வந்த வேகத்திலேயே அந்த சவால்கள் மறைந்தன. அந்த வகையில் தற்போது பிரபலமடைந்து வருகிறது பாட்டில் மூடி சேலஞ்ச். 

கஜகஸ்தானை சேர்ந்த டேக்வாண்டோ தற்காப்பு கலை வீரர் பராபி டாவ்லட்சின், தண்ணீர் பாட்டிலை ஒருவர் பிடித்திருக்க, மூடியை மட்டும் தனியாக தெறித்து பறக்கும் வகையில் பேக் கிக் (back kick) முறையில் பாட்டிலை உதைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.


Advertisement

இதை வேறு யாராவது செய்ய முடியுமா என சவால் விடுக்க, சமூகவலைத் தளங்களில், பாட்டில் மூடி சேலஞ்ச் ட்ரெண்டாகி விட்டது. ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், அமெரிக்க பாப் பாடகர் ஜான் மேயர், ஹாலிவுட் நடிகை ஒயிட்னி கம்மிங்ஸ்
உள்ளிட்ட பிரபலங்கள் பாட்டில் மூடி சேலஞ்சை வெற்றிகரமாக செய்து முடித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளி யிட்டு வருகின்றனர். நடிகர் அர்ஜூன், அக்‌ஷய்குமார் உட்பட பலர் செய்துள்ளனர். 


Advertisement

இந்நிலையில் நடிகை ஸ்வேதா மேனனும் பாட்டில் மூடி சேலஞ்ச் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் தமிழில், சாதுமிரண்டா, நான் அவன் இல்லை 2, அரவான், துணை முதல்வர் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் வெளியிட் டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, தனது ரசிகர்களும் இந்த சவாலில் ஈடுபட்டு உடலை ’பிட்’டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement