மதியம் வரை முக்கியச் செய்திகள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அமமுக போட்டியிடாத நிலையில், திமுக அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.


Advertisement

உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்தள்ளது. இந்த வாக்குறுதியை ஏற்று இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

கர்நாடகா சட்டப்பேரவையில் நாளை நடக்க உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை என மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.


Advertisement

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் கர்நாடக ‌சட்டப்பேரவை சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement