“ஆசிரியருடன் ஒரு செல்ஃபி” - மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பல கல்லூரிகளில் செல்ஃபோன் பயன்படுத்த மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆசிரியர்களுடன் மாணவர்கள் செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுமாறு தெரிவித்துள்ளது.


Advertisement

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் போக்ரியல் நிஷான்க், குரு பூர்ணிமாவை முன்னிட்டு SelfiwithGuru என்ற ஹேஷ்டேக்கைத் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, பல்கலைக் கழகங்களுக்கான மானியக் குழு கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. 


Advertisement

அதில், மாணவர்கள் தங்கள் ஆசிரியருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து, அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னை உள்பட பல பகுதிகளில் கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியருடன் எப்படி செல்ஃபி எடுப்பது எனத் தெரியாமல் மாணவர்கள் குழம்பினர். ஆனாலும் பல்வேறு தரப்பு மாணவர்களும் தங்களது ஆசிரியருடன் புகைப்படங்கள் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement