உலகக் கோப்பையை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் என்று நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் காரி ஸ்டீட் கூறியுள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன. இதுவரை பார்த்திராத அளவிற்கு இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி அவ்வளவு பரபரப்பாக நடைபெற்றது. போட்டி சமனில் முடிந்து சூப்பர் ஓவர் வரை சென்றது. அத்துடன் முடியாமல், இருவரும் தலா 15 ரன்கள் அடிக்க சூப்பர் ஓவரும் டையில் முடிவடைந்தது. ஐசிசி விதிகளில் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து முதன்முறையாக கோப்பையை வென்றது.
அதனையடுத்து, அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் கோப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்டது குறித்து முன்னாள் மற்றும் இந்நாள் வீரரகள் பலரும் விமர்சனம் செய்திருந்தனர். ரசிகர்கள் பலரும் ஐசிசியின் விதிக்கு எதிராக தொடர்ச்சியாக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், போட்டி சமனில் முடிவடைந்த பட்சத்தில் இரு அணிகளுக்கும் கோப்பையை ஐசிசி பகிர்ந்தளித்திருக்க வேண்டும் என்று நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறியுள்ளார். ஈஎஸ்பிஎன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். சூப்பர் ஓவர் விதிகள் மட்டுமின்றி இன்னும் பல விஷயங்களை ஆய்வு செய்து மாற்ற வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்