ஒரு காலத்தில் ஆடம்பர பொருளாக இருந்த செல்போன் இன்று மனிதனின் அத்தியாவசியமாக மாறிவிட்டது. கையில் வைத்திருந்த ஸ்மார்ட் போன்கள் வெடித்துச் சிதறுவதாக வரும் செய்திகளை பார்க்கும்போது, மனதில் பயம் தொற்றிக் கொள்வதை தவிர்க்க முடிவதில்லை.
பேட்டரிகள் வெப்பமடைவதே செல்போன் வெடிப்பதற்கு காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். சீன வகை ஸ்மார்ட் போன்களில் உள்ள தரமற்ற பேட்டரிகள் வெடித்துச் சிதற வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். முன்னணி நிறுவனங்களின் தரமான பொருள்களை பயன்படுத்த வேண்டும், தரமற்ற செல்போன்களையோ, சார்ஜர்களையோ பயன்படுத்த வேண்டாம், உயர் அல்லது குறைந்த மின்சாரத்தில் செல்போன்களை சார்ஜ் செய்ய வேண்டாம் போன்றவை வல்லுநர்கள் கூறும் அறிவுரைகள்.
அதிக அப்ளிகேஷன்களை பயன்படுத்தினால் பேட்டரி வெப்பம் அடைய வாய்ப்புள்ளது என்றும், தொடர்ந்து இன்டர்நெட் பயன்படுத்தினால் பேட்டரியில் பாதிப்பு ஏற்படும் எனக்கூறும் வல்லுநர்கள் ஸ்மார்போன்களை முறையாக பயன்படுத்தினால் ஆபத்துகளை தவிர்க்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.
தொழில்நுட்ப வளர்ச்சி தந்த செல்ஃபோன்களால் நன்மைகள் இருந்தாலும், அதே அளவில் தீமைகளும், பாதிப்புகளும் இருக்கிறது என்பதே நிதர்சனம். நாம் பயன்படுத்தும் சாதனங்களின் தன்மையை அறிந்து, அதனை முறையாக பராமரிப்பதன் மூலமே பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கலாம் எனவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?