கனமழையால் மிதக்கும் அசாம்: உடைமைகளை இழந்து தவிக்கும் மக்கள்

Rain--flood--landslides-hit-normal-life-in-Assam--Bihar--West-Bengal

பீகார் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.


Advertisement

தென்மேற்கு பருவமழையால் அசாம் மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் லட்சுமிபூர், சோனித்பூர், ஜோர்ஹாட், திப்ருகார், சிவசாகர் உள்ளிட்ட 28 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில் பலர் உயிரிழந்த நிலையில் ‌15 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

பார்பேட்டா மாவட்டத்தில் மட்டும் ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் உணவு, குடிநீர், மருத்துவசேவை மற்றும் உடைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அசாமின் தர்ரங் மாவட்டத்தில், வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் கடும் சவால்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டனர்.

அசாமின் மொரிகான் கிராமத்தை, வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். கரையோர கிராமமான மொரிகானில், அணை உடைந்ததால் கிராமத்தை வெள்ளநீர் சூழ்ந்தது. கரைபுரண்டு ஓடி வரும் வெள்ளத்தில் வீடுகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.


Advertisement

மேலும் சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 11 உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அம்மாநில காங்கிரஸ் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement