JUST IN

Advertisement

நிறைவு பெறுகிறதா தோனி இன்னிங்ஸ்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறவில்லை என்றால், அவர் அணிக்கு தேர்வு செய்யப்படமாட்டார் என்று கூறப்படு கிறது. 


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி. உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 18 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்த தோல்விக்கு தோனியின் ரன் அவுட்டும் காரணம். இதையடுத்து தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றும் ஓய்வு பெறக் கூடாது என்றும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. முன்னாள் வீரர்கள் சிலர் அவருக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

இதற்கிடையே அவர் உலகக் கோப்பை தொடர் முடிந்ததுமே ஓய்வு பெறுவார் என்றும் கூறப்பட்டன. ஆனால் தோனி ஓய்வு முடிவு பற்றி எதுவும் அறிவிக்கவில்லை. அவர் 2020-ல் நடக்க இருக்கும் உலகக் கோப்பை டி20 தொடர் அவரை விளையாடு வார் என்று கூறப்படும் நிலையில், அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. அவராக ஓய்வு முடிவை வெளியிடவேண்டும் என்று விரும்பும் இந்திய கிரிக்கெட் வாரியம், இனி அடுத்தடுத்த தொடர்களில் அவரை அணிக்குத் தேர்வு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ’’தோனிக்குப் பின்னால் ரிஷாப் பன்ட் போன்ற இளம் வீரர் கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வழிவிட்டு தோனி ஓய்வு பெற வேண்டும். உலகக் கோப்பையில் தோனியின் ஆட்டத் திறனைப் பார்த்தோம். அவர் கடைசி கட்டத்தில் அதிகமாகத் தடுமாறுகிறார். எந்த பந்துகளையும் அவரால் எதிர்கொள்ள முடி யவில்லை. இது அணியை மோசமாக பாதிக்கிறது. அடுத்து நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அவரை சேர்க்கப்படமாட் டார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் இன்னும் சாதிக்கவோ, நிரூபிக்கவோ ஏதுமில்லை. அதனால் அவராகப் பெருந்தன்மை யோடு ஓய்வு அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையென்றால் அவர் அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை’’ என்றார்.


Advertisement

இதுபற்றி இந்திய தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், தோனியிடம் விரைவில் பேச இருக்கிறார் என்றும் கூறப்படுகி றது. அதோடு விராத் கோலியின் கேப்டன்சி குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement