உலகக் கோப்பைத் தோல்வி: வேதனையிலும் வில்லியம்சன் சாதனை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தாலும் அந்த அணியின் கேப்டன் சாதனை ஒன்றை படைத்துள் ளார்.


Advertisement

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதிய இந்தப் போட்டியில், யாரும் எதிர்பாராத வகையில் பல திருப்பங்களும்  விறுவிறுப்பும் மிகுந்திருந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து, 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்தது. டாம் லாதம் 47 ரன்னும் ஹென்றி நிக்கோலஸ் 55 ரன்னும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 241 ரன் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது. பென் ஸ்டோக்ஸ் 84 ரன்னும் பட்லர் 59 ரன்னும் எடுத்தனர்.


Advertisement

பின்னர் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த ஓவரும் டை ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிக பவுண்டரி அடித்த அணி என்ற கணக்கின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், தங்க ளது 44 ஆண்டுகால கனவைப் பூர்த்தி செய்தது இங்கிலாந்து.

இந்தப் போட்டியில், உலக கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற புதிய சாதனையை நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் படைத்தார். 


Advertisement

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில், 10 போட்டிகளில் விளையாடியுள்ள வில்லியம்சன் 2 சதம் மற்றும் 2 அரைசதம் என 578 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் ஒரே உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையை அவர் படைத் துள்ளார். 2007 ஆம் ஆண்டு, உலகக் கோப்பையில் இலங்கை கேப்டனாக இருந்த ஜெயவர்த்தனே 548 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதை வில்லியம்சன் முந்தியுள்ளார். 
 

loading...

Advertisement

Advertisement

Advertisement