“மொத்த பெருமையும் ஸ்டோக்ஸ், பட்லரை சேரும்” - இங்கிலாந்து கேப்டன் மார்கன்

---Full-credit-to-the-Stokes-and-Butler-who-went-out-for-the-Super-Over------Eoin-Morgan

உலகக் கோப்பை இறுதிப் போட்டியை வென்றதற்கான மொத்த பெருமையும் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லரை சேரும் என இங்கிலாந்து கேப்டன் மார்கன் தெரிவித்தார்.


Advertisement

உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் இடையே நடைபெற்றது. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 241 ரன்கள் எடுத்தது. எளிமையான இலக்கு போல தெரிந்தாலும், இதை எட்டுவதற்கு இங்கிலாந்து பெரும் போராட்டத்தை சந்தித்தது. பொறுப்புடன் விளையாடிய இங்கிலாந்து கீப்பர் பட்லர் 59 (60) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிவரை நாயகனாக போராடிய பென் ஸ்டோக்ஸ் 84 (98) ரன்கள் குவித்து, இலக்கை சமன் செய்தார். இதனால் உலகக் கோப்பை வரலாற்றில் கண்டிராத இறுதிப்போட்டியாக இப்போட்டி சூப்பர் ஓவரை சந்தித்தது.


Advertisement

அணிக்காக போராடிய பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் சூப்பர் ஓவரில் களமிறக்கப்பட்டனர். சாதுர்யமாக விளையாடிய இருவரும் 15 ரன்களை சேர்த்தனர். இதையடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணியும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிலும் கடைசி பந்தில் இரண்டு எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அனைத்து ரசிகர்களும் கண் இமைக்காமல் போட்டியை கண்டனர். ஆனால் ஒரு ரன் மட்டுமே எடுத்ததால், முன்னதாக நடந்து முடிந்த இன்னிங்ஸில் அதிக பவுண்டரிகளை அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அரங்கே அதிர இங்கிலாந்து வீரர்கள் கொண்டாடினர். நியூஸிலாந்து அணியின் குப்தில், மைதானத்தில் கண்ணீர் சிந்த, அவருக்கு இங்கிலாந்து கேப்டன் மார்கன் ஆறுதல் சொன்னார்.

பின்னர் பேசிய மார்கன், “இந்தப் போட்டியில் பல விஷயங்கள் நடந்துவிட்டன. நான் வில்லியம்சன் மற்றும் அவரது அணிக்கு வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த போராட்டம் இரு அணிகளுக்கும் தகுதியான ஒன்று. வில்லியம்சன் அவரது அணியை அருமையாக வழிநடத்தினார். இது ஒரு கடுமையான போராட்டமாக அமைந்தது. விக்கெட்டுகள் சரிய சரிய, இலக்கை எட்டுவது மிகக் கடினமானது. பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து போட்டியை மாற்றினார்கள். அது வெற்றி அடையும் என நினைத்தேன், அது நடந்துவிட்டது. அதனால் தான் சூப்பர் ஓவரிலும் அவர்களையே அனுப்பினோம். மொத்த பெருமைகளும் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லரையே சேரும்” என தெரிவித்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement