மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடைகளை இடம் மாற்றுவது தொடர்பான முடிவை தமிழக அரசு ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
மதுக்கடைகள் வேண்டாம் என்று கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள கிராமங்களில் அவற்றை திறக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனு, நீதிபதிகள் கல்யாணசுந்தரம், சுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை கூடுதல் வழக்கறிஞர் வெங்கட்ரமணி, மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார்.
மதுக்கடைகளுக்கு எதிரான அமைதியான போராட்டங்களில் அரசு இடையுறு செய்யாது என்றும், அதேசமயம் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டால் அதனை காவல்துறை தடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார். ஆனால், அரசின் வாய்மொழி உத்தரவாதத்தை நம்ப முடியாது என்று டாஸ்மாக் கடைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் தெரிவித்தனர்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதை உணர்ந்து அவர்களின் விருப்பத்திற்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆகையால், கூடுதல் டாஸ்மாக் கடைகளை அமைக்கும் முடிவுகளையும், நெடுஞ்சாலையோரம் இருந்த கடைகளை மாற்றி அமைக்கும் திட்டத்தையும் அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் வரவேற்கத்தக்கது என்று தெரிவித்த நீதிபதிகள், கூடுதல் மனுவை முடித்து வைத்தனர்.
Loading More post
''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!
அரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
'அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு எப்போது? எதிர்பார்ப்பு என்ன?': கிஷன் ரெட்டி சிறப்பு பேட்டி
இன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி: தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'