தமிழகத்தில் ரேங்க் அடிப்படையில் பொதுத்தேர்வு முடிவுகள் இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இதன்படி, நாளை வெளியாகும் பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் முதல், இரண்டு, மூன்று என்ற மதிப்பெண் அடிப்படையில் அறிவிப்பு இருக்காது என்று தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளிலும் இதே நிலை தொடரும் என்று அவர் கூறியுள்ளார். பாடவாரியாக சிறந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவிலான தேர்வுகளை கருத்தில் கொண்டு பதினோராம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், இன்னும் 3 வருடங்களில் இந்த நடைமுறை கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழ்வழி கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நாளை வெளியாக உள்ள பிளஸ் டூ தேர்வு முடிவுகளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். தேர்வு முடிவு வெளியான பத்து நிமிடங்களில் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும் இந்த முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Loading More post
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'