ஈரோடு மாவட்டம் பண்ணாரி வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 4 பேருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில், சிலர் மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு ரோந்து சென்ற வனத்துறையினர் வேட்டையில் ஈடுபட்டிருந்த நால்வரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களது காரை சோதனையிட்ட போது அதில் புள்ளி மானை வேட்டையாடி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதன் தொடர்ச்சியாக, மானின் உடலையும் அதை வேட்டையாடப் பயன்படுத்திய இரட்டைக்குழல் துப்பாக்கியையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். வேட்டையாடலில் ஈடுபட்ட பூபதி, கார்த்திக், சதாசிலம், ஸ்ரீதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நால்வரையும் மாவட்ட வனஅலுவலர் அருண்லால் முன்னிலையில் ஆஜர்படுத்தியதில், தலா ஒன்றே கால் லட்சம் வீதம் மொத்தம் 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
Loading More post
ரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்!
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்