நடிகை ஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா? கேரள டிஜிபி மீது போனி கபூர் பாய்ச்சல்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகை ஸ்ரீதேவி கொல்லப்பட்டிருக்கலாம் என்று தனது நண்பர் தெரிவித்ததாகக் கூறிய கேரள முன்னாள் டிஜிபிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.


Advertisement

உறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி, ஹோட்டல் அறையில், குளியல் தொட்டியில் தவறி விழுந்து 2018ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உயிரிழந்தார். அவரின் இறப்பு பலராலும் சந்தேகிக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.


Advertisement

இந்நிலையில், அவர் உயிரிழந்து ஒரு வருடம் கடந்த நிலையில் அவரின் இறப்பு குறித்து கேரள மாநில முன்னாள் டிஜிபி ரிஷிராஜ் சிங், ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக, தன் நண்பர் தடயவியல் நிபுணர் டாக்டர் உமாநாதன் தெரிவித்ததாகக் கூறியிருந்தார்.

இதுகுறித்து கேரள கவுமுதி நாளிதழுக்கு பேசியுள்ள அவர், ''என் நண்பர் உமாததன் தடயவியல் நிபுணர். பல நாட்களுக்கு முன்பு அவர் ஸ்ரீதேவி மரணம் குறித்து என்னிடம் பேசினார். இது நிச்சயம் கொலையாக இருக்கலாம் என்று தெரிவித்தார். ஒருவர் எவ்வளவு போதையில் இருந்தாலும், ஒரு அடி தண்ணீரில் மூழ்க வாய்ப்பில்லை என்றும், அதே நேரம் ஒருவர் காலைப்பிடிக்க, மற்றொருவர் தலையை அழுத்தி தண்ணீரில் மூழ்கடித்தால் மட்டுமே உயிரிழக்க முடியும்’’ என்றும் கூறியதாக டிஜிபி தெரிவித்திருந்தார்.


Advertisement

தடயவியல் நிபுணரான தன் நண்பர் குறித்து அந்த நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் இந்த கருத்தை டிஜிபி தெரிவித் துள்ளார். அவர் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

இந்நிலையில் அவர் கூறியது பற்றி, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் கேட்டபோது, ‘’இதுபோன்ற முட்டாள்தனமான கதைகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. இதுபோன்ற கதைகள் தொடர்ந்து வருவதால் பதில் சொல்ல வேண்டிய அவசிய மில்லை. அடிப்படையில், இது ஒருவரின் கற்பனை மட்டும்தான்” என்று தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement