அசாமில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், 800 கிராமங்கள் மூழ்கியுள்ளன. சுமார் நான்கு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் தேமாஜி, லக்கிம்பூர், விஸ்வநாத், நல்பாரி, கோலாஹாட், மஜூலி, நௌகான், மோரிகான் உள்ளிட்ட 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 800க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியதால், பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான கஜிரங்கா உயிரியல் பூங்காவில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், நீர் யானைகள் உள்ளிட்ட விலங்குகள் பாதுகாப்பு இடங்களை தேடி வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து படகு சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. லூம்டிங்-பதர்பூர் மலைப்பகுதியில் கனமழையால் ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளனர். இதன் காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்