ரயில் நிலையத்தில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை - 2 பாதுகாப்பு பணியாளர்கள் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சோலாங் ரயில் நிலையத்தில் 16 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பஞ்சாப் பாதுகாப்பு பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 


Advertisement

16 வயது சிறுமி ஒருவர் முகேரியன் அருகே உள்ள தனது கிராமத்திற்கு செல்ல சோலாங் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 2 பாதுகாப்பு பணியாளர்கள் அவர் எங்கே செல்ல வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர். பின்னர் அவர்கள் அந்த இளம்பெண்னை ரயில் நிலையத்தில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 


Advertisement

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் தரப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தில்பாங் சிங், தரம்பால் ஆகியோர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் ரயில் நிலையத்தில் அரசு ரயில்வே போலீஸ் பதவியின் பொறுப்பாளராக இருந்த உதவி சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் எனவும் டிஎஸ்பி சுரிந்தர் குமார் தெரிவித்துள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement