தோனியின் வார்த்தைக்கு காத்திருக்கும் கிரிக்கெட் வாரியம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஓய்வு முடிவு குறித்த தோனியின் வார்த்தைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் காத்திருக்கும் என்று வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி. முன்னாள் கேப்டனான அவர் பற்றி சமீபகாலமாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. அவர் ஓய்வு பெற வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என்றும் கூறப்பட்டது. 

’இந்திய கிரிக்கெட் அணிக்கு அவரது பங்களிப்பு அதிகம். அதனால் ஓய்வு முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்’ என்று சிலரும் ’அவர் இன்னும் சிறப்பாகவே ஆடி வருகிறார். அவர் ஓய்வு பெற வேண்டிய அவசியமில்லை’ என சிலரும் கூறி வருகின்றனர். முன்னாள் வீரர்கள் சச்சின், கங்குலி போன்ற வீரர்களுக்கு ஏற்பட்ட அதே நிலை, இப்போது தோனிக்கும் வந்திருக்கிறது.


Advertisement

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20, மூன்று ஒரு நாள் போட்டி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான அணி தேர்வு, வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மும்பையில் நடக்க இருக்கிறது. இதில் தோனிக்கு இடம் கிடைக்காது என்று தெரிகிறது.

இந்த தொடரில் கேப்டன் விராத் கோலி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படுகிறது. அவர்களோடு தோனிக்கும் ஓய்வளிக்கப்படுகிறது. ரிஷாப், தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர்க ளாகச் சேர்க்கப்படுகின்றனர். ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். ஓய்வளிக்கப்பட்ட வீரர்கள் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார்கள். 

இதற்கிடையே, தனது ஓய்வு குறித்த செய்திகளுக்கு தோனி எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார். இந்நிலையில் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘’உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் தோற்றதில் இருந்து அணி இன்னும் மீளவில்லை. வீரர் கள் இன்னும் நாட்டுக்குத் திரும்பவில்லை. அதற்குள் தோனி பற்றி கேட்டால் என்ன சொல்வது? அவர் வார்த்தைக்காக கிரிக்கெட் வாரியம் காத்திருக்கும்’’ என்றார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement