உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ ரெய்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் க்ரோவர் ஆகியோர் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது. 


Advertisement

டெல்லி, மும்பைபில் உள்ள 2 பேரின் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்ற புகாரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 


Advertisement

முன்னதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வெளிநாட்டு நிதி பெற்றதில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக கூறி மும்பையை சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் க்ரோவர் மீது சிபிஐ ஜூன் 18 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது. மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை சிபிஐ எடுத்தது. ஆனந்த் க்ரோவர் வழக்கறிஞர்களை ஒன்றிணைத்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன் தலைவராகவும் உள்ளார்.  

loading...

Advertisement

Advertisement

Advertisement