“இந்திய அணியின் போராட்டக் குணத்தை காண முடிந்தது” - பிரதமர் மோடி

PM-Modi-about-india-loss-in-world-cup-cricket

ஏமாற்றமளிக்கும் முடிவு என்றாலும், இந்திய அணியின் போராட்டக் குணத்தை கடைசி வரை காண முடிந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Advertisement

உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. நேற்றே இந்த ஆட்டம் தொடங்கிய நிலையில், நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்துக் கொண்டிருக்கும்போது, மழை பெய்தது. இதனால் போட்டி இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.அதன்படி இன்று பேட்டிங்கை தொடர்ந்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 239 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 5 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.


Advertisement

அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தாலும், ஜடேஜா, தோனி முடிந்தவரை போராடி பார்த்தனர். இருப்பினும் 49.3 ஓவர்களில் இந்திய அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதேசமயம் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்து போனது.

 

 

இந்நிலையில் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி தோல்வி குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஏமாற்றமளிக்கும் முடிவு என்றாலும் இந்திய அணியின் போராட்டக் குணத்தை கடைசி வரை காண முடிந்தது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் எனத் தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. அது பாராட்டுக்குரியது. வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு அங்கம்; வருங்காலங்களில் வெற்றி பெற வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement