பாகிஸ்தான் தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அவரது நண்பர் ஒருவர் கராச்சியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானை சேர்ந்தவர் முரீத் அப்பாஸ். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதுமட்டுமில்லாமல் தனியாகவும் தொழில் செய்து வந்துள்ளார். தொழில் சம்பந்தமாக அதிஃப் ஜமான் என்பவருடன் அப்பாஸுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் அதிஃப் ஜமான், அப்பாஸ் மற்றும் அவரது நண்பரான ஹிசா ஹயாத் ஆகியோரை சுட்டுக் கொன்றுள்ளார். கராச்சியில் வைத்து இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுமட்டுமில்லாமல் சுட்டுக்கொன்ற அதிஃப் ஜமான், தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்