இன்றைய முக்கியச் செய்திகள் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராஜினாமா எம்எல்ஏக்கள் 10 பேரை சந்திக்க மும்பை சென்ற கர்நாடகா அமைச்சர் சிவகுமார் கைது செய்யப்பட்டார். பத்து பேரையும் சந்திக்க போலீஸ் அனுமதி மறுத்த நிலையில் ஓட்டல் முன் தர்ணா நடத்திய சிவகுமாரை போலீசார் கைது செய்தனர்.


Advertisement

தமிழகத்தில் புதிதாக 3 அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பேரவையில் விதி எண் 110இன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


Advertisement

நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் தமிழக அரசின் மசோதா நிறுத்திவைக்கப்பட்டதாக, 2017ஆம் ஆண்டிலேயே மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் பணியாற்ற 16 முன்னாள் அமைச்சர்கள் உட்பட 70 நிர்வாகிகளை தேர்தல் பொறுப்பாளர்களாக திமுக நியமித்துள்ளது.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement