ஒடிசா மற்றும் மகாராஷ்டிராவில் செயல்படும் இந்திய எஃகு உருக்கு ஆலை நிறுவனமான, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் (SAIL)- இல் அதிகாரி மற்றும் அலுவலக பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணிகள்:
எக்சிகியூடிவ் அதிகாரி
ஆபரேட்டர் போன்ற பல்வேறு பணிகள்
காலிப்பணியிடங்கள்:
எக்சிகியூடிவ் அதிகாரி - 26
ஆபரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் - 179
மொத்தம் = 205 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியான தேதி: 22.06.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 10.07.2019 (நாளை)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2019
வயது வரம்பு: (31.07.2019 அன்றுக்குள்)
1. ஆபரேட்டர் மற்றும் டெக்னீசியன் போன்ற பணிகளுக்கு 18 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும்.
2. அதிகாரி பணிக்கு 18 முதல் 37 வயது இருத்தல் அவசியம்.
3. மற்ற பணிகளுக்கு 18 முதல் 30 வயது இருத்தல் அவசியம்.
தேர்வுக்கட்டண விவரம்:
1. எக்சிகியூடிவ் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.500
2. டிரெய்னி மற்றும் ஆபரேட்டர் பணிகளுக்கான விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.250
3. மற்ற அலுவலக பணிகளுக்கான விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.150
குறிப்பு:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் மட்டுமே இத்தேர்விற்கான கட்டணத்தை செலுத்தலாம்.
ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.15,830 முதல் அதிகபட்சமாக ரூ.58,000 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
1. எக்சிகியூடிவ் அதிகாரி பணிக்கு பொறியியல் பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
2. மற்ற ஆபரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு குறைந்தபட்சமாக டிப்ளமோ இன் இன்ஜினியரிங் அல்லது அதிகபட்சமாக பொறியியல் பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். சைல் (SAIL) நிறுவனத்தின் இணையதளமான www.sail.co.in - என்ற இணையத்தில் சென்று, அதில் 'careers' - என்ற லிங்க்-இல் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, https://www.sailcareers.com/media/uploads/Full_ADVT_No._03_2019_Technical_Staff.pdf- என்ற இணையத்திற்கு சென்று பார்க்கலாம்.
Loading More post
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?