ஆதார் திருத்த மசோதா நிறைவேற்றம் !

ஆதார் திருத்த மசோதா நிறைவேற்றம் !
ஆதார் திருத்த மசோதா நிறைவேற்றம் !

விருப்பத்தின் அடிப்படையில் ஆதாரைப் பயன்படுத்த அனுமதிக்கும் ஆதார் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆதார் மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.‌ இந்நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதாவை மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதன்மூலம் விருப்பத்தின் அடிப்படையில் ஆதாரைப் பயன்படுத்திக் கொள்வதற்கு முன்பு அதன் உரிமையாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். மானியங்களை உரிய நபர்களுக்கு அளிக்கவும், தவறுகள் நிகழ்வதைத் தவிர்க்கவும் தான் ஆதார் எண் கொண்டு வரப்பட்டது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், ஆதார் எண் அளிப்பது கட்டாயம் என்பதற்கு பதிலாக விருப்பத்தின் அடிப்படையிலானது என்று டெலிகிராஃப் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆதார் இல்லை என்பதற்காக எந்தவொரு வாடிக்கையாளரு‌க்கும் சேவை மறுக்கப்படக்கூடாது என்றும், ஆதார் எண் விதிமுறைகளை மீறினால் சம்பந்தப்பட்ட வ‌ங்கிகள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நாளொன்றுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது 123.81 ‌கோடி பேரிடம் ஆதார் அட்டை உள்ளது, அதில் 69.38 கோடி செல்லிடப்பேசி எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com