உலகக் கோப்பையில் நியூஸிலாந்து 4, இந்தியா 3 ! இதென்ன கணக்கு ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இதுவரை 8 முறை மோதியுள்ளன. அதில் நியூசிலாந்து
அணி 4 முறையும், இந்தியா 3 முறையும் வெற்றிப் பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு தெரியவில்லை. உலகக் கோப்பை
போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் அரையிறுதிப் போட்டி இன்று இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு
இடையே நடைபெறுகிறது.


Advertisement

இதனையடுத்து இரண்டாவது அரையிறுதிப் போட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. உலகக் கோப்பை 2019 இன் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை புகழ்ப்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.


Advertisement

இதில், இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதிப் போட்டியை ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்நோக்கி
காத்திருக்கின்றனர். ஏற்கெனவே இந்தத் தொடரின் ஆரம்பக் கட்ட லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெற
இருந்தது. ஆனால், மழை காரணமாக போட்டி நடைபெறாமல் போனது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி
வழங்கப்பட்டது.


Advertisement

இதனையடுத்து உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன்று
மோதுகின்றது. இந்தியாவும் நியூஸிலாந்தும் 16 வருடங்களுக்குப் பின்னர் தற்போதுதான் மோதுகின்றன. கடந்த 2003ஆம் ஆண்டு
கங்குலி தலைமையிலான இந்திய அணி நியூஸிலாந்துடன் களம் கண்டது. அப்போது 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய
அணி அசத்தல் வெற்றி பெற்றது. அதன்பின்னர் நடந்த 2007, 2011 மற்றும் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில்
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் ஒருமுறை கூட மோதிக்கொள்ளவில்லை. 

ஏனென்றால் ‘ஏ’ டீம், ‘பி’ டீம் எனக் குழுக்கள் பிரிக்கப்பட்டு விளையாடியதால் இரண்டில் ஒரு அணி வெளியேறிவிடும்.
இதனால் மோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுவரை உலகக் கோப்பையில் மொத்தம் 7 போட்டிகளில் இந்தியா மற்றும்
நியூஸிலாந்து அணிகள் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 4 போட்டிகளிலும், இந்தியா 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
எனவே, இன்று நடைபெறும் போட்டியின் இறுதியில் இந்தியாவா அல்லது நியூஸிலாந்தா என தெரிந்துவிடும்.

loading...

Advertisement

Advertisement

Advertisement