இந்திய கிரிக்கெட் அணிக்கு மத்திய அமைச்சர் வாழ்த்து!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் வெற்றி பெறுவதற்கு, தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.


Advertisement

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கி லாந்து, நியூசிலாந்து அணிகள், அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் விராத் கோலி தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்திய நேரப்படி, இன்று பிற்பகல் 3 மணிக்கு போட்டி நடக்கிறது.


Advertisement

இந்நிலையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ (Kiren Rijiju), இந்திய கிரிக்கெட் அணிக்கு தனது வாழ்த் துக்களை தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார். அதோடு, இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement