ரோகித் சிறந்த பேட்ஸ்மேன்தான், ஆனால்..? என்ன சொல்கிறார் நியூசி.கேப்டன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

’ஆள் யார் என்பதை பார்க்காமல், ஆரம்பத்திலேயே இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த நினைக்கிறோம்’ என நியூசி லாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் தெரிவித்தார்.


Advertisement

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந் து, நியூசிலாந்து ஆகிய அணிகள், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. 


Advertisement

முதல் அரையிறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் விராத் கோலி தலைமையிலான இந்திய அணியும் கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு போட்டி நடக்கிறது. 

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இப் போட்டி பற்றி நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் கூறும்போது, ’’இந்திய அணி வெற்றிகரமான அணியாக இருக்கிறது. இருந்தாலும் இது கிரிக்கெட் போட்டி. ஒவ்வொரு அணியும் மற்ற அணியை வெல்வதற்கே நினைக்கும். அதற்காகவே போராடும். அன்றைய நாளை பொறுத்தே அனைத்தும் நடக்கும். எங்கள் அணியும் சிறப்பாக விளையாடி வந்திருக்கிறது. 


Advertisement

அரையிறுதிக்கான நான்கு அணிகளில் ஒன்றாக நாங்கள் இருப்பதற்குத் தகுதியானவர்கள்தான். சில போட்டிகளில் தோற்றி ருக்கிறோம். அதைப் பற்றி கவலைப்படாமல், இன்றைய ஆட்டம் பற்றி மட்டுமே கவனத்தில் கொள்கிறோம். இந்திய அணி யில் ரோகித் சர்மா, இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருந்தாலும் இது இரண்டு அணிக்கும் இன்னொரு போட்டி. அவ்வளவுதான். ஆள் யார் என்பதை பார்க்காமல், ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்றே பார்க்கிறோம். அதை செயல்படுத்துவோம்’’ என்றார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement