‘பிகில்’ படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘தெறி’,‘மெர்சல்’ ஆகிய படங்களுக்குப் பின் இயக்குநர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் நயன்தாரா, நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான ‘பிகில்’ படத்தின் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. போஸ்டரை வைத்து பார்க்கும்போதே விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பது தெரியவந்தது. அதில் ஒரு விஜய் கால்பந்தாட்ட வீரராக இருக்கலாம் என்பதையும் நம்மால் உணர முடிந்தது. தற்போது விஜய் ரசிகர்ளுக்கு ஒரு இன்பச் செய்தி வந்திருக்கிறது. அதாவது விஜய் ‘ பிகில்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார். தற்போது இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
A big thank you to our #Thalapathy from all of us (His fans) for granting our request to sing in this album Trust me the song is #Verithanam Thank you @arrahman Sir, @Atlee_dir @Lyricist_Vivek for making this happen @SonyMusicSouth #Bigil pic.twitter.com/WAZbT3eFos
— Archana Kalpathi (@archanakalpathi) July 8, 2019Advertisement
இதுகுறித்து ஏஜிஎஸ் சினிமாஸின் சிஇஓ ஆன அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ ரசிகர்களிடம் இருந்து வந்த கோரிக்கையை நிறைவேற்றி ‘பிகில்’ படத்தில் பாடலை பாடியுள்ள தளபதிக்கு ஒரு பெரிய நன்றி. உண்மையிலேயே பாடல் ‘வெறித்தனம்’.. ஏ.ஆர்.ரஹ்மான் சார், அட்லீ, பாடலாசிரியர் விவேக் ஆகியோருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளிவர உள்ளது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பிகில்’ படத்தில் விஜய் பாடியுள்ளார் என்ற செய்தி வெளியானதுமே வழக்கம்போல ட்ரெண்டிங்கிலும் இடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டது. “வெறித்தனம்’’, “பிகில்”, “தளபதி” போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.
Loading More post
ஆபத்தான முன்னுதாரணம்!- POCSO கீழான பாலியல் வழக்கில் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு
’’அம்மாவின் ஆட்சியமைக்க வீர சபதம் ஏற்போம்’’ - முதலமைச்சர் பழனிசாமி
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!