இன்று பிறந்தநாள் கொண்டாடும் இந்திய கிரிக்கெட் அணியின் "தாதா" கங்குலி! 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் சட்டென நினைவுக்கு வரும் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. தாதா என கொண்டாடப்படும் கங்குலி, இன்று தமது 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


Advertisement

ஆக்ரோஷம் பீறிடும் ஆட்டத்தை களத்தில் வெளிப்படுத்தும் இந்த வங்கத்து புலிக்கு ரசிகர்கள் சூடிய செல்லப்பெயர் தான் தாதா. 300-க்கும் மேற்பட்ட ஒரு நாள் போட்டிகள், 100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள். 50-க்கும் மேற்பட்ட ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பெருமைக்குரியவர். சக வீரர்களால் அதிகம் மதிக்கப்பட்டவர், அதே அளவுக்கு வெறுக்கப்பட்டவர் என இருவேறு குணாதிசயங்களுடன் இருக்கிறது கங்குலியின் கிரிக்கெட் வரலாறு. 


Advertisement

சச்சினுக்கு தொடக்க ஆட்டத்தில் தோள் கொடுத்தது, தலைமைப் பொறுப்பில் தனித்துவத்துடன் செயல்பட்டது என கங்குலியின் பங்களிப்பு மிளிர்கிறது. ஆஸ்திரேலியாவில் 1992-ஆம் ஆண்டு நடைபெற்ற பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் கங்குலி. அந்தத் தொடரில் அவர் குறிப்பிடும்படியாக எதையும் சாதிக்கவில்லை. அதன்பின்னர் படிப்படியாக ஆட்டத்திறனை வெளிப்படுத்தி அவர் சாதிக்கத் தொடங்கினார். 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடர் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் கங்குலி. முதல் டெஸ்ட்டிலேயே சதமடித்து தமது வரவை பிரகடனப்படுத்தினார். அந்தத் தொடரில் இரு சதங்களை கங்குலி விளாசினார். 

தொடக்க காலத்தில் ஒருநாள் போட்டிகளில் மத்திய வரிசை வீரராக களமிறங்கிய கங்குலி, பின்னர் தொடக்க வீரராக களமிறங்கி ஜொலித்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 7212 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரத்து 363 ரன்களை அவர் குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளையும் சாய்த்து அவர் சாதித்துள்ளார்.


Advertisement

2005-ஆம் ஆண்டு அப்போதைய பயிற்சியாளர் கிரேக் சேப்பலுடன் ஏற்பட்ட மனக்கசப்பு, கங்குலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலக நேரிட்டது. அணியிலும் இடம் கிடைக்காமல் போனது. அதன் பின்னர் பல போராட்டங்களை கடந்து இந்திய அணியில் இடம்பிடித்தார் கங்குலி. 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார் கங்குலி.

பின்னர் பயிற்சியாளராக, ஆலோசகராக, பிசிசிஐ நிர்வாகியாக, மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக, வர்ணனையாளராக இந்திய கிரிக்கெட்டுக்கு சேவையாற்றியுள்ளார் கங்குலி. அதே சேவையை தற்போது தொடரவும் செய்கிறார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement