“எந்த அணியோடும் தோற்போம், எந்த அணியோடும் வெல்வோம்” - விராட் கோலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரையிறுதிப் போட்டியில் எதிரணி குறித்து எந்தவித கவலையும் இல்லை என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.


Advertisement

உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகளில் 15 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இந்திய அணி அசத்தியுள்ளது. இதையடுத்து செவ்வாய் கிழமை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை எதிர்த்து இந்தியா களம் காண்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், மற்றொரு அரையிறுதிப் போட்டியில் வெல்லும் அணியுடன் இறுதிக்கோப்பையில் மோதும். 


Advertisement

இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள விராட் கோலி, “அரையிறுதியில் யார் எதிரணி என்பதில் ஒரு விஷயமும் இல்லை. புள்ளிகள் பட்டியலின் அடிப்படையில் எதிரணி குறித்து எந்தவித கவலையும் இல்லை. நாங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் எந்த அணியிடமும் தோற்போம். சரியாக விளையாடினால் எந்த அணியையும் வெல்வோம். அதனால் நாங்கள் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதிலேயே கவனத்தை செலுத்துவோம். எங்கள் வழியில் சென்று நாங்கள் ஒரு நல்ல முடிவை அடைவோம்’ என்றார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement