ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தனது குழந்தைக்கு பாலூட்டி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார், அந்நாட்டின் பசுமைக் கட்சியைச் சேர்ந்த லாரிசா வாட்டர்ஸ்.
ஆஸ்திரேலியாவில் பசுமைக் கட்சித் தலைவர்களில் ஒருவர் லாரிசா வாட்டர்ஸ். குயீன்ஸ்லேண்ட் நாடாளுமன்ற செனட்டரான இவருக்கு சமீபத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. இதற்காக மகப்பேறு விடுப்பு முடிந்து, 2 மாத பெண் குழந்தையுடன் நேற்று நாடாளுமன்றத்திற்கு வந்து முக்கிய வாக்கெடுப்பில் கலந்துகொண்டார்.
வாக்கெடுப்பின்போது, தனது இருக்கையில் அமர்ந்தபடி, குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டினார். இதன்மூலம், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
இத்தகவலை டுவிட்டரில் பதிவு செய்துள்ள வாட்டர்ஸ், ‘நாடாளுமன்ற அவையில் பாலூட்டப்படும் முதல் குழந்தை எனது மகள் ஆலியா என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்’ என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அவையில் பெண் உறுப்பினர்கள், தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதை அனுமதிக்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு தீவிரமாக அழுத்தம் கொடுத்தவர் வார்ட்டர்ஸ். இது தொடர்பாக கடந்த ஆண்டு விவாதம் நடத்தப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர், இந்தப் புதிய சட்டத்தின்கீழ், வாட்டர்ஸ் தாய்மார்களுக்கான சிறப்பு சலுகையை பயன்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு