இங்கிலாந்து கால்பந்து வீரருடன் கிரிக்கெட் ஆடிய கோலி - வைரல் வீடியோ 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இங்கிலாந்து தேசிய கால்பந்து அணியைச் சேர்ந்த கால்பந்து வீரரான ஹாரி கேன் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் சேர்ந்து கிரிக்கெட் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


Advertisement

உலகக் கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் நுழைந்துள்ளன. உலகக் கோப்பையை வெல்லும் நோக்கில் நான்கு அணிகளும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து தேசிய கால்பந்து அணியைச் சேர்ந்த கால்பந்து வீரரான ஹாரி கேன் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை சந்தித்துள்ளார். அப்போது அவர் விராட் கோலியுடன் சேர்ந்து கிரிக்கெட் ஆடியுள்ளார். 


Advertisement

ஹாரியிடம் பேசிய விராட் கோலி, எனக்கு கால்பந்து பிடிக்கும். உடற்பயிற்சிக்காக கிரிக்கெட் வீரர்கள் கால்பந்து விளையாடுவார்கள் ஆனால் எந்தக் கால்பந்து வீரரும் கிரிக்கெட் விளையாடுவதில்லை என கிண்டலாக தெரிவித்தார். பின்னர் ஹாரியும், கோலியும் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட ஹாரி, விராட் கோலியுடன் மகிழ்ச்சிகரமாக நேரம் செலவழித்தேன். இங்கிலாந்து அணியுடன் விளையாடாத வரை கோலிக்கும் அவரது அணிக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். கோலியும் ஹாரியும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement