[X] Close >

நீட் சதிகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சமூக சமத்துவ மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்

Social-equality-Doctors-association-leader-Ravindranath-talks-against-NEET-dress-code

நீட் தேர்வில் ஒரே மாதிரி கேள்விகள் இடம் பெறாமல் செய்த சதிகாரர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக சமத்துவ மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


Advertisement

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்திரநாத், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவ கல்வி இடங்களுக்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 2 மசோதாக்ளுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் 10 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் தமிழகம் பின்நோக்கிச் சென்றுவிடும்.

மாநில உரிமைகளுக்கு எதிராக நீட் தேர்வு உள்ளது. இதனை தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணாவிடில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.


Advertisement

நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. குஜராத்திலும் மேற்கு வங்கத்திலும் வெவ்வேறு கேள்வித்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் எளிமையாகவும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடினமாகவும் கேள்விகள் அமைந்துள்ளன. 180 வினாக்களும் ஒன்றாக இருக்கும் வகையில் வினாத்தாளை அமைத்து மறுதேர்வை அனைத்து மொழிகளிலும் நடத்திட வேண்டும். நீட் யூஜி தேர்வில் வெவ்வேறு வினாக்கள் இடம்பெற காரணமான சதிகாரர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக நாளை நீதிமன்றத்தை நாடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close